ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்.கே.செல்வமணி இயக்கும் படம் அகிலா. வீரப்பன் கதையை மையமாக வைத்து கேப்டன் பிரபாகரன் படத்தையும், ராஜீவ் படுகொலையை மையமாக கொண்டு குற்றப்பத்திரிகை படத்தையும் தந்த ஆர்.கே.எஸ். அகிலாவில் தீவிரவாதத்துக்கு எதிராக கொடிபிடிக்கிறார். சிறு பட்ஜெட் படமான இது அகிலா என்ற பெண் சிறுமி தீவிரவாதத்தால் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை சொல்கிறது. பேபி யுக்தா அகிலாவாக நடிக்கிறார். இவர் தவிர பி.ஆனந்தன், ஆர்த்திக், நரேன், ஹீதாஷா ஆகியோர் நடித்துள்ளனர். அமீர்தி காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால் படத்தின் வில்லனாக அதாவது தீவிரவாதியாக ஆர்.கே.செல்வமணியே நடித்துள்ளார்."புரட்சி என்ற பெயரில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு அப்பாவி மக்களை கொல்லும் எந்த இயக்கத்தையும் மக்கள் மன்னிப்பதில்லை. மக்கள் சக்தியில்லாமல் எந்த இயக்ககும் வெற்றி பெற்றதில்லை. தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற சொற்களையே பூமியில் இருந்து விரட்ட வேண்டும் என்ற கருத்தை தாங்கி படம் அடுத்த மாதம் வெளிவருகிறது" என்கிறார் ஆர்.கே.செல்வமணி.
ஆர்.டி.எக்சுக்கு எதிராக ஆர்.கே.எஸ். படம்