தேசிங்குராஜா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | அம்மா, தங்கச்சி வேடங்களில் சுவாசிகா | ஒரு படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள் | மீண்டும் ஒரு ‛ஜென்ம நட்சத்திரம்' : 6 மணி 6 நிமிடம் 6 நொடியில் வெளியான தலைப்பு | தயாரிப்பாளர்களை கண்டித்து: பெப்சி ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு | 'மையல்' நாயகிக்கு அழகும், அம்சமும் இருக்கிறது : கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார் பாராட்டு | தலைப்பு பிரச்னை : சந்தானம் படத்திற்கு தடை கேட்டு வழக்கு | பிளாஷ்பேக்: வில்லன் வேடத்தால் சினிமாவை விட்டு விலகிய கராத்தே மணி | பிளாஷ்பேக் : 75 வருடங்களுக்கு முன்பே 'டைம் டிராவல்' | தனுஷ், விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது |
வேலு விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகும், "வெள்ளச்சி என்ற படத்திற்கு, இளையராஜாவின் மகள் பவதாரிணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தில், "பொய்யா போச்சு என் காதல் என, காதலியை பிரிந்த சோகத்தில், காதலன் பாடுவது போல் அமைந்த ஒரு பாடலை, இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அதிக உருக்கமாக பாடியுள்ளார். இதேபோல், "மச்சான்கோ, மாமன்கோ சொன்னா தான் கேளுங்கோ என்றொரு, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி பாடலும், இந்தப் படத்தில் அமைந்துள்ளது. இந்த இரண்டு பாடல்களுக்குமே, எஸ்.கோபால்ஜி நடனம் அமைத்துள்ளார். இவர், "தா, மதுரைப் பொண்ணு சென்னை பையன், மலர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல படங்களுக்கு, நடனம் அமைத்தவர்.