ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் படத்தில் அறிமுகமான விபா, மதில் மேல் பூனையில் கதாநாயகியாகியிருக்கிறார். அடுத்து மேல்தட்டு ஹீரோக்களை கேட்ச் பண்ணும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார் என்றாலும் அவரது முயற்சிகள் இன்னமும் கைகூடவில்லை. இருப்பினும் கோலிவுட்டில் சாதிக்காமல் வெளியேற மாட்டேன் என்று மார்தட்டி வருகிறார் விபா.
இதற்கிடையே, பின்னணி பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் உள்ளதாம். அதனால் தனது முதல் படநாயகனும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியை சமீபத்தில் சந்தித்து, என் குரல் குயில் மாதிரியிருக்கும் கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன் என்று ஏழு கட்டை எட்டு கட்டு உச்ச ஸ்தாயிபில் பாடினாராம். அதை கேட்ட இசையமைப்பாளர் இன்னும் விபா எதிர்பார்க்கிற பதிலை சொல்லவில்லையாம். ஆனாலும் அவரது பதில் வரும் வரை காத்திருக்க முடியாமல் அடிக்கடி அவரை தொடர்பு கொண்டு எப்போ ரெக்கார்டிங் என்று கேட்டு இம்சிக்கிறாராம் நடிகை.