குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
எல்லோரையும் போலவே காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கும் தயாரிப்பாளர் ஆசை வந்துவிட்டது. மலையன் படத்துக்கு பிறகு வேறு படமே இல்லாமல் பல ஆண்டுகள் காத்திருந்த கோபிதான் கஞ்சா கருப்புவை தயாரிப்பாளர் ஆக்கியவர். பலர் தயாரிப்பாளராகி நொந்து நூடுல்ஸ் ஆன கதையெல்லாம் கஞ்சா கருப்புக்கு தெரியும் என்பதால் பிடி கொடுக்காமல் இருந்தார் கருப்பு. ஆனாலும் விடாமல் துரத்திய கோபி, அவருக்கு உதவியாளராகவே மாறி உதவிகள் செய்து கல்லை கரைப்பது போல கருப்புவின் மனதை கரைத்து விட்டார். கே.கே பிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் பட நிறுவனத்தை துவக்கி வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் கருப்பு. கோபி இயக்குகிறார், அங்காடி தெரு மகேஷ் ஹீரோ. கருப்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதோடு வடிவேல் குழுவில் இருந்து தற்போது வாய்ப்பில்லாமல் இருக்கும் அனைவரையும் இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறார். ஹீரோயின் தேடுதல் நடந்து வருகிறது. படம் முழுக்க முழுக்க காமெடி படமாம்.