குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நாடகத்தில் நடிக்க இருக்கிறார் மாஜி ஹீரோயின் லட்சுமி. இதுபற்றி அவர் கூறியதாவது: ஒய்.ஜி. பார்த்தசாரதி தொடங்கிய யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ் அமைப்பில் எனது அம்மா ருக்மணியும், நானும் உறுப்பினர்களாக இருந்தோம். எனது அம்மா ஒய்,ஜி.பார்த்தசாரதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். நான் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நாடகங்களில் நடித்திருக்கிறேன். சினிமாவுக்கு சென்ற பிறகு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. அதன் பிறகு குடும்பம் பொறுப்பு என்று வந்துவிட்டதால் நாடகம் பக்கம் போகமுடிவில்லை. இனி நாடகங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.
ஒரு நடிகையின் திறமையை நிர்ணயிப்பது நாடகங்கள் தான். சினிமாவில் நிறைய டேக் போகலாம், குளோஸ்-அப் வைக்கலாம், இப்படி எந்த வசதியும் இல்லாமல் நாடகத்தில் நடித்து கைதட்டல் வாங்கும்போது சந்தோஷமாக இருக்கும். இப்போது வரும் நடிகைகளுக்கு தமிழே பேசத் தெரியவில்லை பிறகு எப்படி நடிப்பார்கள். அவர்களுக்கு எல்லா வசதியும் சில படங்களிலேயே கிடைத்து விடுவதால் அவர்களுக்கு நடிப்பு பற்றி அக்கறை இல்லை. வந்தோமா வந்த வேகத்தில் சம்பாதித்தோமா என்றுதான் யோசிக்கிறார்கள். என்றார்.