குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
கிளாமரில் பெரிய அளவில் புகுந்து விளையாடாதவர் நடிகை த்ரிஷா. காரணம் அவரது ஒல்லிக்குச்சி உடம்புக்கு ஓவர் கிளாமர் செட்டாகாது என்பதால்தான். விஜய்யுடன் நடித்த குருவி படத்தில் தொடை தட்டியபடி அவர் நடித்ததைகூட அவரது அபிமானிகள் ரசிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஓவர் கிளாமர் காட்டி நடித்தால் சினிமா மார்க்கெட்டில் இருந்து சீக்கிரமே காலியாகி விடுவோம் என்பதை உணர்ந்து கொண்ட த்ரிஷா, அதன்பிறகு அடக்கி வாசிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில், தற்போது நடித்து வரும் பூலோகம், என்றென்றும் புன்னகை படங்களிலும் கவர்ச்சிக்கு முழு தடை விதித்திருக்கிறார் நடிகை. இதனால் கிளாமர் என்ற ஊறுகாய் ஆங்காங்கே படத்தில் இருந்தால்தான் இளவட்ட ரசிகர்களை திருப்திபடுத்த முடியும் என்பதால், வேறு கிளாமர் நடிகைகளை பாடல் காட்சிகளில் இறக்கி விட்டுள்ளனர் அப்படங்களின் இயக்குனர்கள்.