குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
களவாணி படத்தில் விமலுடன் ஜோடியாக நடித்தவர் ஓவியா. கேரளத்து வரவான இவருக்கு அதன்பிறகு சிறிய தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மீண்டும் அதே விமல் நடித்த கலகலப்பு படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை பரபரப்பாக்கிக்கொண்டார். அதோடு, அப்படத்தின் இன்னொரு நாயகியான அஞ்சலியுடன் போட்டி போடுவது போல் ஓவர் கிளாமர் காட்டி நடித்து, என்னாலும் கிளாமர் நாயகியாக முடியும் என்பதை நிரூபித்தார்.
இந்த நிலையில், அதற்கடுத்தபடியாக மீண்டும் அதே விமலுடன் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ச்சியாக விமல் படங்களில் ஓவியா நடிப்பதால், அவருக்கு விமல் சிபாரிசு செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுபற்றி ஓவியாவைக்கேட்டால், இந்த கதைக்கு ஓவியா நடித்தால் நன்றாக இருக்கும் என்கிற பட்சத்தில் டைரக்டர்களாக என்னை அழைக்கிறார்கள். இதுவரை நான் நடித்த எல்லா படங்களிலும் அப்படிதான் வாய்ப்புகள் வந்தன. அதனால் விமல் சொல்லித்தான் எனக்கு படவாய்ப்பு கிடைக்கிறது என்பதில் துளியும் உண்மை இல்லை. மேலும் இந்த சினிமாவில் நான் என்னையும், எனது திறமையையும் நம்பித்தான் இருக்கிறேன். விமலை நம்பி இல்லை என்கிறார் ஓவியா.