சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள வில்லன் நடிகர் திலகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாகி உள்ளது. கேரளாவில் புதிய மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தபோது நடிகர் திலகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை படப்பிடிப்பு குழுவினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடும் மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவருக்கு உடனடியாக டாக்டர்கள் நவீன மருத்துவ உயிர் காப்பு உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர். ஆனால் இதய துடிப்பு சீரான நிலையில் இயங்காததால் தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய நிலைமை மீண்டும் கவலைக்கிடமாகி உள்ளதால் டாக்டர்கள் குழு திலகன் உயிரை காப்பாற்ற போராடி வருகிறது.