ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கேரளாவைச் சேர்ந்த ரம்யா நம்பீசன், "ராமன் தேடிய சீதை, "ஆட்டநாயகன்", "இளைஞன்", "குள்ளநரிக்கூட்டம்" உட்பட, சில படங்களில் நடித்தார். பின், காணாமல் போனார். கொஞ்சம் "கேப்விட்டு இப்போது, "பீட்சா என்கிற படத்தில் நடிக்கிறார். "இடைவெளி ஏன்என, கேட்டதற்கு "குடும்ப பாங்கான அழகும், கொஞ்சம் நடிப்பும் இருந்தும்கூட, எனக்கு பட வாய்ப்பு வராமல்போனது, ஏன் என தெரியவில்லை. அதுதான், என்னோட தாய்மொழியான,மலையாளப் படங்களில் நடிக்கப்போயிட்டேன். இப்ப, தமிழ் பட வாய்ப்புகள் வருது. இது எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ்,இந்த முறை ரன் எடுக்காம விடமாட்டேன். "பீட்சாங்கற இத்தாலியின் உணவுப்பெயர், கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் இந்த பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர். இது ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதை. எனக்கு ஜோடியா, விஜய்சேதுபதி நடிக்கிறார். இதில் எனக்கும், அவருக்கும் நடுவே,நெருக்கமான காதல் காட்சிகள் உள்ளன."பீட்சாவின் ஒவ்வொரு ஸ்லைசுக்குள்ளும், ஒரு சுவாரசியம் மறைந்திருக்கிறது என்றார் ரம்யா நம்பீசன்.