Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்முட்டியின் மனமும்...! ஹீரோக்களின் குணமும்...!!

08 செப், 2012 - 09:36 IST
எழுத்தின் அளவு:

கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90க்கும் அதிகமான குழந்தைகள் பலியானார்கள். விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட ஹீரோக்கள் ஓடிப்போய் அஞ்சலி செலுத்தி மாலை மாலையாய் கண்ணீர் விட்டார்கள். ஆளாளுக்கு லட்சக் கணக்கில் நிதி உதவி அளிப்பதாக அறிக்கை விட்டார்கள். ஆனால் எல்லாமே வெறும் வேஷமாகிப்போனது ஒரு சில நடிகர்கள் தவிர மற்ற யாருமே பணம் அனுப்பவில்லை. சிலர் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்தது. திரைக்கு வெளியேயும் தங்களை சிறந்த நடிகர்களாக நிரூபித்தார்கள் ஹீரோக்கள்.

இப்போது சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 38 பேர் இறந்துள்ளனர். நிதி உதவி அளிக்க வேண்டாம். அல்லது அளிப்பதாக வெட்டி பந்தா அறிக்கை விட வேண்டாம். குறைந்த பட்சம் அனுதாப செய்தியாவது வெளியிட்டார்களா என்றால் இல்லை. எங்கே பணம் கொடுக்க வேண்டியது வருமோ என்று யாரும் வாய் திறக்கவில்லை. "என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்" என்று புலம்பிய சூப்பர் ஸ்டார்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கண்டுகொள்ள வில்லை. சிவகாசி என்ற படத்தில் நடித்த விஜய்க்கு, காஜல் அகர்வாலோடு டூயட் பாடுவதற்குதான் நேரம் இருக்கிறது. அவரது கவலை இப்போது அவரது துப்பாக்கி தீபாவளிக்கு வெடிக்குமா வெடிக்காதா என்பது பற்றித்தானே தவிர சிவகாசி பட்டாசை பற்றியும், அங்கே வெடித்து சிதறிய அப்பாவி தொழிலாளர்களையும் பற்றி  அல்ல.

ஆனால் இந்த ஹீரோக்களின் முகத்தில் அடித்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. யாரும் கேட்காமல், யாரும் கோரிக்கை வைக்காமல் தனது மருந்து கம்பெனியில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள தீக்காய மருந்துகளை சிவகாசிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மம்முட்டி.

தீகாயங்களுக்கான மருந்து தயாரிப்பதில் மம்முட்டிக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை புகழ்பெற்றது. அக்னிஜித் என்ற மருந்து ரொம்பவே பிரபலம். இந்த மருத்துவமனைக்கு சிவகாசி மருத்துவமனையிலிருந்து அக்னிஜித் மருந்து கேட்டு 35 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தது. இதைக் கேள்விப்பட்ட மம்முட்டி சிவகாசிக்கு தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமா அனுப்பி வைக்கும்படியும். இன்னும் மருந்துகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னிஜித்து என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன், என்றார்.

தமிழ் ஹீரோக்களே சினிமாவில் மட்டுமல்ல... நிஜத்திலும் ஹீரோவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

Advertisement
கருத்துகள் (288) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (288)

vijay - Bangalore,இந்தியா
22 செப், 2012 - 12:26 Report Abuse
 vijay கடவுள் நேரே வந்து உதவ மாட்டார்.அவர் உங்கள் போல மனித கடவுள் மூலம் தான் கொடுப்பார் நீங்களும் ஒரு கடவுள் தான் நன்றி சொல்லி உங்களை எங்களிடம் இருந்து பிரிக்க விரும்பலை
Rate this:
mahadevan - tirupur(tamilnadu),இந்தியா
19 செப், 2012 - 00:43 Report Abuse
 mahadevan mammootiii இஸ் ரியல் சூப்பர் ஸ்டார் அண்ட் ரியல் god
Rate this:
kalaiyarasan.rakceramics - ras al khaima,ஐக்கிய அரபு நாடுகள்
18 செப், 2012 - 00:16 Report Abuse
 kalaiyarasan.rakceramics மம்மூட்டி சார் நீங்க உண்மையான மனித கடவுள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட நாள் வாழ வேண்டும்
Rate this:
AJITHKUMAR - chennai,இந்தியா
17 செப், 2012 - 21:24 Report Abuse
 AJITHKUMAR சார்,யு ஹவே குட் ஹார்ட், கிரேட் எசேம்ப்லே டு ஒதேர்ஸ் வதோ ஹவே எநௌக்ஹ மோனே வித் செல்பிஷ்நேச்ஸ்.
Rate this:
kalaiyarasan - rasal khaima,ஐக்கிய அரபு நாடுகள்
16 செப், 2012 - 23:45 Report Abuse
 kalaiyarasan mamooty'sir thanks very much your hind help.south indian real hero
Rate this:
மேலும் 283 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in