விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
தமிழ் சினிமாவில் சுவாரஸ்யம் இருக்கிறதோ இல்லையோ, சினிமாவுக்கு வெளியே சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லை. அதில் ஒன்றுதான் இது. 1974ம் ஆண்டு வெளிவந்த படம் அவள் ஒரு தொடர்கதை. கே.பாலச்சந்தர் இயக்கிய படம், சுஜாதா, கமல், ஜெய் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெய்வம் தந்த வீடு வீதி இருக்க... கடவுள் அமைத்து வைத்த மேடை... போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள் இடம்பெற்ற படம். அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே படத்தை 1976ம் ஆண்டு அந்துலேனி கதா என்ற பெயரில் தெலுங்கில் இயக்கினார் பாலச்சந்தர். இதில் கமல் தமிழில் நடித்த கேரக்டரில் நடிததார். சுஜாதா நடித்த கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். ஜெய்கணேஷ் நடித்த கேரக்டரில் ரஜினி நடித்தார். அங்கும் இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.
இப்போது பழைய படங்களை தூசி தட்டி எடுத்து வெளியிடும் சீசன். அதனால் சிம்பொனி மூவீஸ் என்ற நிறுவனத்தார். அந்துலேனி கதாவை தூசி தட்டி எடுத்துள்ளனர். அவள் ஒரு தொடர்கதை தமிழில் நாம் பார்த்த படம்தான் என்றாலும் தெலுங்கில் ரஜினி நடித்திருப்பதால் ஒரு கணக்குபோட்டு இந்தப் படத்தை இப்போது டப்பிங் செய்து வருகிறார்கள். கடவுள் அமைத்து வைத்த மேடை என்று படத்துக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். ரஜினிக்கு அவரது குரலில் பேசும் மிமிக்ரி கலைஞர் ஒருவர் வாய்ஸ் கொடுத்து வருகிறார். இது எப்படி இருக்கு?