Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சட்டம் ஒரு இருட்டறையில் நான்தான் ஹீரோயின்: பியா அதிரடி

I am the only heroine in sattam oru iruttarai says piaaகோ படத்துக்கு பிறகு சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடித்து வருகிறார். பியா. இதில் பிந்து மாதவியும், ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார்கள். ஆனாலும் நான்தான் படத்தின் ஹீரோயின் என்கிறார் பியா. மேலும் அவர் கூறியதாவது:  தமிழில் நான் நடித்த படங்களில் எல்லாமே கவர்ச்சி வேடமாக அமைந்து விட்டது. இதனால் எனக்கு கவர்ச்சி இமேஜ் வந்து விட்டது. பொது நிகழ்ச்சிகளுக்கும் நான் கவர்ச்சி உடையில் செல்வதாக சொல்கிறார்கள். நான் மும்பை கலாச்சாரத்தில் வளர்ந்தவள். கவர்ச்சியான உடையும், வாழ்க்கையும், சினிமாவும் எனக்கு சகஜமானது. இது மற்றவர்கள் கண்ணுக்கு தவறாக தெரிந்தால் நான் என்ன செய்ய முடியும். கவர்ச்சி நடிகை என்று என்னை குறிப்பிட்டால் சந்தோஷம்தான்.

சட்டம் ஒரு இருட்டறையில் ரம்யாகிருஷ்ணன், பிந்து மாதவியுடன் நடித்தாலும் நான்தான் ஹீரோயின். எனக்குத்தான் ஹீரோவுடன் 3 டூயட் பாட்டு இருக்கிறது. அப்படியென்றால் நான்தானே ஹீரோயின். இந்தப் படத்திலும் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். கோ படத்துக்கு பிறகு தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் இந்திப் படத்துக்கு போய்விட்டேன். அதனால் நடிக்க முடியவில்லை. தமிழில் அதிகமாக நடிக்காவிட்டாலும் தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இனி தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவேன். என்றார்.

Tags »
piaa, பியா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in