Advertisement

சிறப்புச்செய்திகள்

'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தமன்னா மீது வழக்கு! இந்திப்பட தயாரிப்பாளர் மிரட்டல்!!

23 ஆக, 2012 - 02:56 IST
எழுத்தின் அளவு:

தமன்னா மீது வழக்கு தொடர இருப்பதாக இந்திப்பட தயாரிப்பாளர் மிரட்டல் விடுத்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா.  அதன் பிறகு பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் தெலுங்கு திரையுலகிலும் தனது இளமை துள்ளும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகுக்கு அறிமுகமானபோது தமன்னா செய்து கொண்ட ஒப்பந்தம் இப்போது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.  நடிகை தமன்னாவின் முதல் படம் ‘சாந்து ஷா ரோஷன் செஹ்ரா’. இந்த படத்தில் நடிக்க 2003-ம் ஆண்டு இந்தி பட தயாரிப்பாளர் சலீம் அக்தர் தமன்னாவை ஒப்பந்தம் செய்தார்.

படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்காக 2005-ம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் சம்பளத்தில் 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார். இதற்காக ஒப்பந்த பத்திரத்தில் தமன்னா கையெழுத்திட்டதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தை தமன்னா மீறி விட்டதாக அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் சலீம் அக்தர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், என் மகளும் தமன்னாவும் ஒரே பள்ளியில் சேர்ந்து படித்தனர். சாந்து சா ரோஷன் படத்தில் தமன்னாவிற்கு வாய்ப்பு தரும்படி என் மகள்தான் சிபாரிசு செய்தாள். தமன்னா மிகவும் அழகாக இருப்பார் என அவள்தான் என்னை வற்புறுத்தினாள். பிறகு தமன்னா பெற்றோருடன் என் வீட்டிற்கு வந்தார். அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததுடன் மேற்கண்ட ஒப்பந்தம் செய்து கொண்டோம். பின்னர் தமன்னா தென்னிந்திய சினிமாவுக்கு சென்று விட்டார். ஒப்பந்தம் பேசிய நான் அவரை தொடர்பு கொண்டபோதிலும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தப்படி எனக்கு பணமும் தரவில்லை. தனது பெயரில் எழுத்துக்களையும் திருத்தம் செய்து கொண்டார். அவரது குடும்பப் பெயரான ‘பாட்டியா’ வை விலக்கிவிட்டு வெறும் தமன்னா என கூறிக்கொள்கிறார். தற்போது இந்தியில் ‘ஹிம்மத்வாலா’ என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். என்னோடு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு தமன்னா பதில் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நான் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in