வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
அமிதாப் பச்சனின் குரோர்பதி நிகழ்ச்சி சோனி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி உலகப்புகழ் பெற்ற நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சி அமிதாப்பச்சனின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்தது. இதன் மூலம் சாமான்யர்கள் கூட லட்சங்களை பார்த்தார்கள். அதோடு அமிதாப்பின் கனிவான, பண்பே உருவான இன்னொரு முகத்தையும் உலகம் பார்த்தது.
இந்த நிகழ்ச்சி மீண்டும் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்க, சோனி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. சோனி நிறுவனத்தின் துணைத்தலைவரும், மார்க்கெட்டிங் தலைவருமான தனிஷ்கான், இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். தினமும் சோனி டிவியில் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது. இம்மாத இறுதிக்குள் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.