Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதியோர் இல்லம் கட்ட நிதி திரட்டுகிறார் குட்டி பத்மினி

10 ஆக, 2012 - 12:38 IST
எழுத்தின் அளவு:

நடிகை குட்டி பத்மினி காஞ்சிபுரம் அருகே தனது மித்ராலயா அறக்கட்டளை மூலம் மோக்சா என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்று கட்டுகிறார். இதற்கு நிதி திரட்டுவதற்காக வருகிற 18ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் மறைந்த இந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா நினைவாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் முகமது அஸ்லம், அனுராக் சேத் உள்ளிட்ட பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் ரா«ஷ் கண்ணாவின் திரைப்படங்களிலிருந்து பாடல்களை பாடுகிறார்கள். இதுகுறித்து குட்டி பத்மினி கூறியதாவது:

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நான் ஒரு தொலைக்காட்சி தொடர் நடித்தபோது அந்த தொடரில் நான் பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு வயதான கேரக்டரில் நடித்தேன். அதன் படப்பிடிப்பு விஷ்ராந்தி இல்லத்தில் நடந்தது. அப்போதுதான் அங்கு முதியவர்கள் படும் வேதனை¬யும், அவர்களுக்கு அந்த இல்லத் தலைவி சாவித்ரி உழைப்பதையும் பார்த்தேன். அப்போதே நாமும் ஒரு முதியோர் இல்லம் கட்டி தொண்டு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். என் வருமானத்தில் இருந்து பணம் சேர்த்து காஞ்சிபுரம் அருகில் 4 ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த இடத்தில் இப்போது மோட்சா என்ற பெயரில் முதியோர் இல்லம் கட்ட முடிவு செய்திருக்கிறேன். முதல் கட்டமாக 500 முதியவர்களை பாதுகாக்கும் வகையில் கட்டிடம் கட்ட முடிவு செய்திருக்கிறேன். அதற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். அவ்வளவு தொகை என்னால் செலவு செய்ய முடியாது என்பதால் இந்த நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட முடிவு செய்தேன். இது முற்றிலும் இலவசமாக செயல்படும் இல்லம். காஞ்சியில் இறந்தால் புண்ணியம் என்பது இந்துக்களின் நம்பிக்கை அதனால்தான் இங்கு கட்டுகிறேன். வாழ்க்கையின் கடைசி பகுதியில் சந்தோஷமாக தங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடன் முதியவர்களை பாதுகாக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான மருத்துவ வசதிகளையும் செய்யப்போகிறேன். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நானும் அந்த முதியோர் இல்லத்திலேயே குடியிருந்து அவர்களுக்கு சேவை செய்யப்போகிறேன். கடவுளின் கருணை இருந்தால் 500 பேர் என்பது 5 ஆயிரம் பேர் என ஆகும். என்றார் 

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

தட்டி - gifvkhg,இந்தியா
11 ஆக, 2012 - 15:46 Report Abuse
 தட்டி நீ குட்டி பத்மினி இல்ல கிழவி பத்மினி
Rate this:
புண்ணாக்கு - Chicago,யூ.எஸ்.ஏ
11 ஆக, 2012 - 08:41 Report Abuse
 புண்ணாக்கு கண்டிப்பாக இதில் வியாபார நோக்கம் இருப்பதாக தான் நினைக்கிறேன். இதே நடிகை முன்பு ஒவ்வொரு மேடையிலும் "நான் கண் தானம் செய்து விட்டேன்" என்று தம்பட்டம் அடித்தவர் தானே. ஒருவர் மறைந்த பிறகு தானே, அதுவும் ஒரு முறை தானே கண் தானம் செய்ய முடியும்? உண்மையிலேயே கண் தானம் செய்பவர்கள் காதும் காதும் வைத்த மாதிரி செய்வார்கள். அதை ஊருக்கு தெரியபடுத்தி காசு பண்ண மாட்டார்கள். இவர் விரும்பினால் தனது சொந்த பணத்தில் ஏற்கனவே இருக்கும் முதியோர் இல்லங்களுக்கு நன்கொடை கொடுக்கலாமே!
Rate this:
சுமதி - ALLI,அங்கியுலா
11 ஆக, 2012 - 00:26 Report Abuse
 சுமதி ஒய்வு இல்லம் மூடப்படவேண்டும் நிலை வரவேண்டும், இது வளரக்கூடாது. 500 - 5000 வளரக்கூடாது. ஏன் நம் மக்கள் மனம் திருந்தி நாளை நமக்கும் இதே கதி என்பது உறுதி என எண்ணி முதியோர் இல்லம் நடத்த அவசியம் இல்லாமல் செய்வது அவசியம். யாரும் தங்கள் வீட்டில் உள்ள அனுபவம் வாய்ந்தோரை பண்புடனும் பணிவுடனும் கவனித்துகொள்ள வேண்டும். அனுபவம் வாய்ந்தோர் அன்புடன் புரிந்து உணர்வோடு, ஒன்றாய் வாழ வேண்டும். இன்றைய இளையோர் நாளைய முதியோர். தான் எனும் அகங்காரம் இருவரும் ஒழிக்க வேண்டும், இளையோர் முதியோரை அரவணைக்கவேண்டும். முதியோர் இளையோருக்கு வழிவிடவேண்டும். குட்டி பத்மினிக்கு வாழ்த்துக்கள். உங்கள் எண்ணம் உயர்வானது.
Rate this:
y.mohamed rafi - dammam,சவுதி அரேபியா
10 ஆக, 2012 - 22:30 Report Abuse
 y.mohamed rafi உங்கள் எண்ணம் நான் வரவேற்கிறேன்.ஆனால் 500 என்பது 5 ஆக குறைய vendum yendru ப்ரே பண்ணுங்கள் ப்ளீஸ். petrorkalai முதியோர் illathil தள்ளாதீர்கள்.
Rate this:
கதிர் - chennai,இந்தியா
10 ஆக, 2012 - 17:51 Report Abuse
 கதிர் எனக்கும் அப்படித்தானே தோன்றுகிறது...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in