Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுதந்திரத்திற்கு முந்தையகால கதை பாலாவின் பரதேசி...!

09 ஆக, 2012 - 10:41 IST
எழுத்தின் அளவு:

 பாலா இயக்கி வரும் பரதேசி படத்தின் கதை, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக அதாவது 1930ம் ஆண்டு காலத்து கதையாக உருவாகி வருகிறது. சேது, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற வெற்றி படங்களை இயக்கி டைரக்டர் பாலா, இப்போது பரதேசி என்ற படத்தை இயக்கியும், பி ஸ்டூடியோ சார்பில் தானே தயாரித்தும் வருகிறார். இப்படத்தின் நாயகனாக மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவும், நாயகிகளாக வேதிகா மற்றும் பேராண்மை தன்ஷிகாவும் நடிக்கின்றனர்.

பொதுவாக பாலா படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் இப்படத்திற்கு வழக்கத்தை காட்டிலும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பாலாவின் முந்தைய படங்களை போன்று இந்தப்படம் இருக்காது. ஏ‌னென்றால் படத்தின் கதை 1930ம் ஆண்டு அதாவது நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்து கதை. மேலும் பாலா தனது கூட்டணியை மாற்றியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமாரும், ஒளிப்பதிவாளராக செழியனும், வசனகர்த்தவாக நாஞ்சில் நாதனும், படத்தொகுப்பாளராக கிஷோரும் பணியாற்றி வருகின்றனர்.

மானாமதுரை, சிவகங்க‌ை, தேனி, மூணாறு மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பரதேசி படத்தை படமாக்கி முடித்துவிட்டார் பாலா. அதுவும் வெறும் 90 நாட்களிலேயே முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இப்போது படத்திற்கான போஸ்ட் புரோடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.

மேலும் எப்போதும் இல்லாமல் புதுமையாக பரதேசி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை லண்டனில் வருகிற 19 தேதி நடத்த திட்டமிட்டு இருக்கிறார் பாலா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழியில் உருவாகி இருக்கும் இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

அமோன் - chennai,இந்தியா
13 அக், 2012 - 16:55 Report Abuse
 அமோன் என்னதான் இளையராஜா சார் இசை பிரம்மாவாக இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அறைச்ச மாவையே அறைப்பது.இது இளைஞர்கள் காலம் போட்டி போடாமல் விலகுவதே நல்லது.பாலாவின் படைப்புகள் உலகலவில் செல்ல வேண்டியவை ராஜாவால் அவை குண்டு சட்டிக்குள் தினறியது தான் உண்மை . G.V.P IS RIGHT CHOICE OF BALA
Rate this:
rahman - chennai,இந்தியா
11 அக், 2012 - 09:17 Report Abuse
 rahman யா குட் பாயிண்ட்
Rate this:
chandru - Tirupur,இந்தியா
10 அக், 2012 - 14:10 Report Abuse
 chandru கண்டிப்பாக இசையில் ஜீவன் இருக்காது. கதைக்கு வேண்டுமானால் பாலா மூளையை தேய்த்துஇருக்கலாம். ஆனால் இசையை கோட்டைவிட்டுவிட்டார். ஆயிரம் ஜி வீ வந்தாலும் இசைஞானியின் பாதம்பட்ட ஒரு துகளை கூட தொடமுடியாது. உருவத்திருக்கு உயிர் வேண்டாமா?
Rate this:
வைரமணி - dharmapuri,இந்தியா
13 ஆக, 2012 - 12:29 Report Abuse
 வைரமணி இதையல்லாம் நீங்க ஒரு கமன்ட் பண்ணறிங்க நீங்க தான் நிஜ பரதேசி
Rate this:
மூர்த்தி p - vijayamangalam,இந்தியா
13 ஆக, 2012 - 05:56 Report Abuse
 மூர்த்தி p குட் luck
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in