வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |

மதுரை: "சிறுவயதில் என்னை குடும்பத்தினர், ஆசிரியர் திட்டுவர். அதை பிடிக்காமல் எப்படி ஏற்றேனோ, அதேபோல், இங்கு பாராட்டுக்களையும் ஏற்கிறேன், என, இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். குமுதம் குழுமம் சார்பில், இளையராஜா எழுதிய "பால் நிலாப் பாதை, "எனக்கு எதுவோ உனக்கும் அதுவே..., புத்தகங்கள் அறிமுக விழா மதுரையில் நடந்தது. மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் கமலாத்மானந்தா தலைமை வகித்தார்.
இளையராஜா பேசியதாவது: சிறுவயதில் என்னை குடும்பத்தினர், ஆசிரியர் திட்டுவர். அதை பிடிக்காமல் எப்படி ஏற்றேனோ, அதேபோல் இங்கு என்னை புகழ்ந்தவற்றையும் ஏற்கிறேன். புகழ் ஒட்டாது. "உங்கள் இசை இல்லாமல், நான் சினிமா தயாரிக்கமாட்டேன் என, யாரும் கூறினால், இசை அமைக்கமாட்டேன். "என்னை யாருடனும் ஒப்பிட முடியாது என, இங்கு கூறினர்; இங்குள்ள தமிழறிஞர்கள் கற்ற அளவிற்கு, நான் கற்றவன் இல்லை, என்றார்.
கவிஞர்கள் சிற்பி பாலசுப்பிரமணியம், முத்துலிங்கம், பழனிபாரதி, புலவர் நமச்சிவாயம், சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன், தமிழறிஞர் ஞானசுந்தரம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்றனர்.