சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
போல் பச்சன் படம் ஹிட் ஆகியிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை அசின். வெற்றி படம் என்பது அசினுக்கு புதிதல்ல என்றாலும், போல்பச்சன் படம் அவருக்கு புது அந்தஸ்தை பெற்று கொடுத்துள்ளது. ரூ,100 கோடி வசூல் சாதனை படங்களில் நடிப்பதை இந்தி நடிகைகள் கவுரவமாக பார்க்கிறார்கள். இதில் கரீனா கபூர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்த கோல்மால் 3, திரி இடியட்ஸ், பாடிகார்டு, ரா ஒன் போன்ற படங்களில் நடித்துள்ளார். கரீனா கபூருக்கு அடுத்த இடத்துக்கு அசின் உயர்ந்துள்ளார். அசின் ஏற்கனவே நடித்த கஜினி, ரெடி, ஹவுஸ்புல் படங்கள் ரூ.100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தன. தற்போது போல்பச்சன் படம் 100 கோடி வசூல் சாதனையை தாண்டி விட்டது. இதனால் கரீனாவுக்கு போட்டியாக அசின் உயர்ந்து விட்டார்.
இதுகுறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், “நான் இந்தி திரையுலகில் நுழைந்து இன்னும் ஐந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை. இவ்வளவு குறைந்த காலத்தில் எனக்கு இதுபோன்ற உயர்ந்ததொரு அந்தஸ்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. போல்பச்சன் எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பு படமாகும், என்று கூறியுள்ளார்.