இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் அம்மாவின் கைப்பேசி படத்தில் நாயகன் சாந்தனுவுக்கு, நாயகி இனியா முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெறுகிறது. இந்த காட்சியில் சாந்தனுவுக்கு முத்தம் கொடுத்த அனுபவம் பற்றி இனியா பேட்டியொன்றில் கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், தங்கர்பச்சான் தேவையில்லாமல் முத்தக்காட்சியை வைக்க மாட்டார். கதைக்கும், காட்சிக்கும் அத்தியாவசியமாக இருந்ததால்தான் அந்த காட்சியை படமாக்கினார். படம் பார்க்கும்போது தெரியும். அதில் விரசம் இருக்காது. ஒரு அத்தை மகனை, மாமா மகள் எந்த அளவுக்கு நேசிக்கிறாள் என்பது அந்த காட்சியில் வெளிப்படும். அதனால்தான் துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தேன், என்று கூறியுள்ளார்.
இனியாவின் முத்தத்தை இன்முகத்துடன் பெற்ற சாந்தனு கூறுகையில், தங்கர்பச்சான் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்துக்காக என்னிடம் உடல் எடையை குறைக்க சொன்னார். ஆறரை கிலோ உடல் எடையை குறைத்தேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, அவருடைய வீட்டில் நடிப்பு பயிற்சி பெற்றேன். அவர் நடித்துக்காட்டியபடி, படத்தில் நடித்து வருகிறேன். அவர் சொன்னதை எல்லாம் செய்கிறேன். அப்படித்தான் இந்த முத்த காட்சியும். ஒரே டேக்கில் படமாக்கி விட்டார், என்றார்.