ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதியவர் என்.வி.ராம்குமார் இயக்கத்தில், ஸ்ரீவிஷாலி பிலிம் மற்றும் வி.பி.பிலிம்ஸ் தயாரிப்பில் "அங்காடித்தெரு" மகேஷ், "குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்" தனன்யா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் "வெயிலோடு விளையாடு" திரைப்படத்தில் கைப்பந்து விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறதாம். நிஜத்தில் கைப்பந்து எனப்படும் வாலிபால் பிளேயரான மகேஷ், இப்படத்தில் நடிக்க சம்மதிக்க இப்படத்தின் கதை கைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பது தான் காரணமாம். மேலும் கார்த்திக்ராஜா இசையில், நா.முத்துக்குமார், யுகபாரதி, பிரியன் உள்ளிட்ட பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதியிருக்கும், இப்படத்தில் இசைஞானி இளையராஜாவும் ஒருபாடலை தானே, மகன் கார்த்திக்ராஜாவின் இசையில் எழுதி பின்னணியும் பாடியிருக்கிறாராம். அதேபோன்று களவாணி விமலும் ஒத்தப்பாட்டுக்கு செம குத்துடான்ஸ் போட்டிருக்கிறாராம்! முதலில் இப்பாடலுக்கு ஆட மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்த விமல், அதன்பின் ஐந்து நாட்களுக்கு அத்திருவிழா பாடல்காட்சியில் நடனக்குழுவினருடன் 5000 மக்களுக்கு முன்னிலையில் நாட்டரசன் கோட்டையில் ஆடி அசத்தினராம்! அடடே!!