Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

7 வயது சிறுமியை தேடும் கமல்ஹாசன்!

16 ஜூலை, 2012 - 09:27 IST
எழுத்தின் அளவு:

நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக ஹாலிவுட்டில் இயக்கி-நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக நடிப்புத் திறமையுடன் கூடிய 7 வயது சிறுமியை தேடி வருகிறார். ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு, அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் கேரக்டரும். எனவே படம் முழுக்க கமல்ஹாசனுடன் இந்தக் குழந்தை கேரக்டரும் கூடவே வருமாம்.

இதுகுறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், பார்க்க அழகாக இருந்தால் மட்டும் பத்தாது, நன்கு நடிக்கவும் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட சிறுமியைத்தான் தேடி வருகிறோம். நான்கூட 7 வயதில்தான் நடிக்க வந்தேன். எனவே அந்த வயதில் ஒரு குழந்தை எப்படி இருக்கும், எப்படி உணரும் என்பது எனக்குத் தெரியும். எனவே 7 வயது குழந்தையுடன் இணைந்து நடிப்பது என்பதை ரொம்பவே ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

குமார் - chennai,இந்தியா
21 ஜூலை, 2012 - 00:46 Report Abuse
 குமார் எனக்கும் ஏழு கழுதை வயது ஆகிறது.
Rate this:
கார்த்திக் - Atlanta,யூ.எஸ்.ஏ
17 ஜூலை, 2012 - 16:43 Report Abuse
 கார்த்திக் என்னிடம் ஒரு மூன்று குழந்தை உள்ளது அதுவும் அமெரிக்காவில் இங்கு உங்கள் தொடர்பு முகவரி கொடுத்தால் தொடர்பு கொள்ளலாம்.
Rate this:
கமல் ரசிகன் - chennai,இந்தியா
16 ஜூலை, 2012 - 15:47 Report Abuse
 கமல் ரசிகன் அன்புடைய கமல் அவர்களுக்கு ஒரு சின்ன ஆலோசனை : நீங்களே இதை உருவாக்கலாமே
Rate this:
Baskaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஜூலை, 2012 - 09:41 Report Abuse
 Baskaran நாங்களும் ஏழு வயசைத் தாண்டித்தான் வந்தோம். எங்களுக்கும் ஏழு வயதுக் குழந்தை எப்படி இருக்கும், எப்படி உணரும் என்பது தெரியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in