கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் |
படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்படும் படம் புதுமுகங்கள் தேவை. இந்த படத்தில், சிவாஜி தேவ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சிங்கக்குட்டி என்ற படத்தில் நடித்தவர். இன்னொரு நாயகனாக ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் அறிமுகம் ஆகிறார். பானு, விஷ்ணுப்ரியா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, ராஜ்கபூர், காதல் தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். எஸ்.ஏ.அபிமான் கதை - திரைக்கதை எழுத, கவிதாபாரதி வசனம் எழுதியிருக்கிறார். மனீஷ்பாபு இயக்குகிறார்.
படத்தை பற்றி டைரக்டர் மனீஷ் பாபு கூறுகையில், சிவாஜி தேவ், சினிமாவில் உதவி டைரக்டராக இருப்பவர். எப்படியாவது டைரக்டராகி விட வேண்டும் என்பது இவருடைய ஆசை. ராஜேஷ் யாதவ் ஒரு ஓட்டலில் சூப்பர்வைசராக இருக்கிறார். இவருக்கு எப்படியாவது சினிமா தயாரிப்பாளர் ஆகிவிட வேண்டும் என்று ஆசை. இரண்டு பேரும் சேர்ந்து படம் தயாரிக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் புதுமுகங்கள் தேவை படத்தின் கதை. வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது, என்றார்.