நடிகர்கள் அணிந்துள்ள முகமூடி : மாளவிகா மோகனன் | கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து | மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது | மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை |
இன்றைய காலகட்டத்தில் பெரிய நடிகர்களின் படமே தியேட்டர்களில் ஒரு மாதம் ஓடுவது குதிரைக்கொம்பாக இருக்கின்ற வேளையில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கர்ணன் படம், 48 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசாகி இன்று 100நாட்களை கடந்து ஓடி சரித்திர சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இப்படத்தின் 100-வது நாள் விழாவையொட்டி சமீபத்தில், சென்னை சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான சிவாஜி ரசிகர்கள் கர்ணன் படம் பார்க்க திரண்டு வந்தனர்.
அப்போது சிவாஜி ரசிகர் ஒருவர் கூறுகையில், கர்ணன் என்ற மாபெரும் காவியம் 48 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்து 100நாட்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகத்தில் எந்த ஒரு நடிகருக்கும் இதைப்போன்ற ஒரு மாபெரும் வரவேற்பு இருந்ததில்லை. அவருடைய படத்தை யாரும் மிஞ்ச முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் என்று கூறியுள்ளார்.
சிவாஜியின் இளம் ரசிகர் ஒருவர் கூறுகையில், சிவாஜி யார் என்றே எனக்கு தெரியாது. என்னுடைய அப்பா நிறைய சிவாஜி படங்களை பார்ப்பார். ஒருநாள் என்னிடம் சிவாஜியின் புதியபறவை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பார்க்க சொன்னார். நானும் பார்த்தேன். அப்படியொரு நடிப்பு. அவரை மாதிரி யாரும் நடிக்க முடியாது அப்போது முதல் அவர் ரசிகராகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கூறுகையில், கர்ணன் படம் 100 நாட்களை கடந்து ஓட காரணம். நவீன தொழில்நுட்பம் கிடையாது. முழுக்க முழுக்க அவரது நடிப்பு மட்டும் தான். அவருடைய நடிப்பு தான் இந்தக்கால இளைஞர்களையும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வைத்திருக்கிறது. சரித்திரத்தையும், புரணாத்தையும் நமது மக்களுக்கு கண்முன் காட்டிய இந்தியாவின் ஒரே நடிகர் சிவாஜி மட்டும்தான். அதேப்போல் இந்தபடத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையும், இந்தபடத்திற்காக பாடுபட்டு உழைத்த அத்தனை கலைஞர்களும் தான். கர்ணன் படம் மட்டுமல்ல புதியபறவை, தில்லானா மோகனாம்மாள் போன்ற படங்களும் இனி வெளியாக உள்ளன. இதற்கு பிறகு இனிமேல் புதிய படம் எடுப்பதற்கே பலர் யோசிக்கும் சூழல் உருவாகும் என்று கூறியுள்ளார்.