ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
முதல்படத்திலேயே மாமனாருடன் சல்லாப காட்சியில் தைரியமாக நடித்தவர் நடிகை அமலாபால். மைனா படம் மூலம் உச்சத்திற்கு சென்ற அவர் தெய்வத்திருமகள், முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்ற படங்களில் நடித்தார். இருந்தும் அதன்பிறகு தமிழில் போதிய படவாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு பக்கம் போனார். அங்கும் சரிபடவாய்ப்புகள் இல்லாததால் இப்போது தனது சொந்த ஊரான மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் தனக்கு பிகினி வேடத்தில் நடிக்க எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, இன்றைய சூழலில் கிளாமர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது வளர்ந்து வரும் நடிகைகளும் கூட பிகினியில் நடிக்க தயாராகி வருகின்றனர். எனக்கும் பிகினி உடையில் நடிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.