எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
"வாகைசூட வா", "மவுன குரு" போன்ற படங்களில் நடித்த நடிகை இனியா அடுத்தப்படியாக தங்கர்பச்சன் படத்தில் நடிக்கிறார். "அழகி", "சொல்ல மறந்த கதை", "பள்ளிக்கூடம்" போன்ற உணர்வு சார்ந்த படங்களை இயக்கிய தங்கர்பச்சன் களவாடிய பொழுதுகள் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் முடிந்து வருடங்கள் சில ஓடியும், சில பல காரணங்களால் இன்னும் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் தனது படைப்பாக "அம்மாவின் கைப்பேசி" என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சாந்தனுவும், ஹீரோயினாக இனியாவும் நடிக்கிறார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து இனியா கூறியுள்ளதாவது, அம்மாவின் கைப்பேசியில், செல்வி எனும் கதாபாத்தரத்தில், சிறிய நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியாக நடிக்கிறேன். தங்கர்பச்சனின் நிறைய படங்களை நான் பார்த்து ரசித்து இருக்கிறேன். அவருடைய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது ரொம்ப ஆச்சரியப்பட்டேன். முன்பு பாரதிராஜா சார் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தபோது நான் எப்படி ஆச்சரியப்பட்டேனோ அதைப்போன்று தான் தங்கர்பச்சன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோதும் உணர்ந்தேன். பாரதிராஜா, தங்கர்பச்சன் போன்ற பெரிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க நான் கொடுத்து வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜூன் மாதம் முதல்வாரத்தில் "அம்மாவின் கைப்பேசி" படம் ஆரம்பமாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்குகிறது.