மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'கமல், அஜித், விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து விட்டேன். ஆனால், ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு வேளை, அந்த வாய்ப்பு விரைவில் கிடைத்தால், சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அதைச் செய்வேன்' என சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியிருந்தார்.
இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினியை வைத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்குகிறார். ரஜினி, முழு நேர அரசியலுக்கு வருவதற்குள் இந்தப் படத்தை முடித்துவிடுவது என்றும் தீர்மானித்துள்ளனர். இதற்காக, தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது.
குறிப்பாக, இசையமைப்பாளரை முடிவெடுக்கத் தீவிரம் காட்டுகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் ஆகிய இருவர் பெயரை படத் தயாரிப்பு குழுவிடம் ரஜினி ஏற்கனவே பரிந்துரைத்திருக்க, அந்த லிஸ்டில் இப்போது ஹாரிஸ் ஜெயராஜும் சேர்ந்திருப்பதாக தகவல் சொல்கின்றனர். ஒருவேளை ஹாரிஸ் ஜெயராஜ் தான் ரஜினியின் அடுத்தப் படத்துக்கான இசையமைப்பாளர் என்றால், ஹாரிஸ் ஜெயராஜின் சமீபத்திய ஏக்கம் போக்கப்பட்டு விடும்.