ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் டிரைலர் இன்று மதியம் 1.30 மணிக்கு யு டியூபில் வெளியாக உள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் டிரைலரை மிகப் பெரும் சாதனை புரிய வைக்க அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முந்தைய டிரைலர்களின் சாதனைகளை சில மணி நேரங்களில் முறியடிக்கும் நோக்கத்துடன் அவர்கள் இருப்பதற்குப் போட்டியாக விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்க உள்ளார்கள்.
இதற்கு முன் வெளிவந்த விஜய் படங்களின் டீசர், டிரைலர்களுக்கு அஜித் ரசிகர்கள் அதிகமான டிஸ்-லைக்குகளைப் போட்டார்கள். அதற்கப் பழி வாங்கும் விதமாக இன்று 'விஸ்வாசம்' டிரைலர் வெளிவந்த உடன் அதன் 'டிஸ்-லைக்'கும் சாதனை புரிய வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புதிய டிரென்டிங்குகளை உருவாக்கி வருகிறார்கள்.
இது தனிப்பட்ட மோதல் அல்ல எங்களை பழி வாங்கியதற்கு பழிக்குப் பழி என பல விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்று 'விஸ்வாசம்' டிரைலருக்கு அதிக டிஸ்-லைக்குகள் வந்தால் அதற்கு முழு காரணம் விஜய் ரசிகர்கள்தான்.