மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… | கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' | அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? |
சாமி பக்தி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓவியர் ஸ்ரீதர், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு கலைக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் பல்வேறு வகையான ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியக்கூடத்தை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் பேசிய கமல்ஹாசன், ஸ்ரீதர் என் மீது அன்பு கொண்டவர். என்னை ஓவியங்களாக வரைந்து அவைகளை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறார். அந்த ஓவியங்களை எல்லாம் என் அலுவலகத்தின் முன்பு வைத்து இருக்கிறேன். நம் கலைகள் இன்னும் நவீனத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. சினிமா மட்டுமல்லாமல், ஓவியங்களும் இப்போது டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். கலைஞனை நம்பி செலவு செய்தால்தான் கலை வளர முடியும். கோவிலுக்குள் இருப்பவர்களை விட, வெளியில் இருப்பவர்களுக்குத்தான் பக்தி அதிகம். அதேபோல் கலைஞனை விட, ரசிகனுக்குத்தான் ரசனை அதிகம். நானே வேறு படங்களை பார்க்கும்போது, நல்ல கலைஞனாக மாறியிருக்கிறேன், என்றார்.