ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மாரி-2. முதல் மூன்று நாட்கள் முன்பதிவு செய்யப்பட்டதால் ஒருளவு ஓப்பனிங் இருந்தது. ஆனால் மாரி 2 படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு இல்லை. இந்த படத்தின் ரிசல்ட் தெரிவதற்கு முன்னரே, தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தை தொடங்கிவிட்டார் தாணு.
'வட சென்னை' படத்தை தொடர்ந்து வெற்றிமாறனும், தனுஷும் மீண்டும் இணையும் இந்த படத்துக்கு 'அசுரன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பில், வேலு பிரபாகரன் இயக்கிய படத்தின் பெயர் தான் அசுரன். எனவே இந்த தலைப்புக்கு ஆர்.கே.செல்வமணி ஒப்புதல் கொடுப்பாரா என்று தெரியவில்லை.
ஒருவேளை அசுரன் தலைப்பை ஆர்.கே.செல்வமணி தர மறுத்துவிட்டால் படத்துக்கு வேறு தலைப்பு வைக்கவும் தயாராக இருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நேரத்திலேயே தனுஷ் இந்த படம் குறித்த தகவலை பகிர்ந்திருந்தார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, வெற்றிமாறனும், தனுஷும் இப்போது 'அசுரன்' படத்தில் இணைந்திருப்பதால் 'வட சென்னை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா இல்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.