ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித்தின் 'விஸ்வாசம்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதியன்று வெளியாக இருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்திருக்கிறது! அதேநாளில் ரஜினியின் பேட்ட படமும் வெளியாகிறது!
சமீபத்தில் 'பேட்ட' படத்தின் சென்சார் முடிவடைந்தது. அப்படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் 'விஸ்வாசம்' படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. 'விஸ்வாசம்' படத்தைப் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் படத்திற்கு அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்கிற 'யு' சான்றிதழை வழங்கியுள்ளனர்.
அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்', 'விவேகம்' ஆகிய படங்கள் அதிரடி ஆக்ஷன் படங்களாக இருந்தன. 'வேதாளம்' படத்திற்கு சென்சாரில் 'யு' சான்றும், 'விவேகம்' படத்திற்கு யு/ஏ சான்றும் வழங்கப்பட்டன. 'விஸ்வாசம்' குடும்ப பின்னணியிலும் கிராமத்துப் பின்னணியிலும் உருவாகி உள்ளது.
எனவே 'வேதாளம்' படத்தைப்போலவே 'விஸ்வாசம்' படத்திற்கும் தணிக்கை குழுவினர் 'யு' சான்று வழங்கியிருக்கின்றனர்.