ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர் கமல் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் தன்னுடைய உடல் உயரத்தை குறைத்து காட்டும்படியாக கேரக்டரில் நடித்து பாராட்டு பெற்றார். உயரம் குறைக்கப்பட்டது ரியலாக இருப்பது போலவே படத்தில் தெரிந்தது. அதற்கான டெக்னிக்கை நடிகர் கமலும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இணைந்து செய்திருந்தனர். பின், அந்தப் படம் 'அப்பு ராஜா' என்ற பெயரில் இந்தியிலும் எடுக்கப்பட்டு வெளியானது.
இந்நிலையில், அதே போன்றதொரு உயரம் குறைந்த ஒரு கேரக்டரில் நடிகர் ஷாரூக்கான் நடித்துள்ளார். 'ஜீரோ' என்ற பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் அந்தப் படம், கடந்த 21ல் வெளியாகி, படு தோல்வியை சந்தித்துள்ளது. அதற்குக் காரணம், ஷாரூக்கான, படத்தில் தத்ரூபமாக கேரக்டரோடு ஒன்றவில்லை என்பதுதான்.
உயரம் குறைந்தவராக காட்டப்படும் ஷாரூக்கான், காமெடி செய்வது போல ஆகி விட்டதாக பலரும் கூறியிருக்கும் நிலையில், சினிமா இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன், 'நம்ம கமல் சார் எவ்ளோ பெரிய ஆள்னு காட்டறதுக்கு வந்திருக்கு 'ஜீரோ' படம்' என கூறியிருக்கிறார்.