ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2018ம் ஆண்டு முடிவதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளன. இந்த வாரமும், அடுத்த வாரமும் வெளியாகும் படங்களுடன் இந்த வருடத்திய வெளியீடுகள் நிறைவடைகின்றன. இந்த ஆண்டில் இதுவரை சுமார் 170 படங்கள் வெளிவந்துள்ளன. இன்னும் சுமார் 10 படங்கள் வெளிவர வாய்ப்புள்ளன. ஆக, மொத்தமாக இந்த வருடப் படங்களின் எண்ணிக்கை 180ஐத் தாண்டினால் ஆச்சரியம் தான்.
இந்த வருடத்தில் அதிகப் படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறுகிறார். அவர் நடித்து இந்த வருடத்தில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜுங்கா, செக்கச் சிவந்த வானம், 96, சீதக்காதி' ஆகிய படங்கள் அவருடைய திரைப்படப் பட்டியலில் சேரும்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2010ம் ஆண்டு வெளிவந்த 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 8 வருடங்களில் 25 படங்களைத் தொட்டுள்ளார். நாளை(டிச.,19) வெளியாக உள்ள 'சீதக்காதி' படம் விஜய் சேதுபதிக்கு 25வது படம்.
இந்த வருடத்திய படங்களில் விஜய் சேதுபதிக்கு 'செக்கச் சிவந்த வானம், 96' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகவும், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜுங்கா' தோல்விப் படங்களாகவும் அமைந்தன. 'சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் தான் நடித்துள்ளார். அந்தப் படத்தின் வெற்றியும், தோல்வியும் அவரை பெரிதும் பாதிக்க வாய்ப்பில்லை.
2018 போலவே 2019லும் அதிகப் படங்களில் நடிக்கும் நடிகர் என்ற பெருமை விஜய் சேதுபதிக்கே கிடைக்கும் வாய்ப்புள்ளது. 2019 பொங்கலுக்கு அவர் நடித்து 'பேட்ட' படம் வெளிவர உள்ளது. அடுத்து 'சூப்பர் டீலக்ஸ்' படம் வெளியாகலாம். அதன் பின்னர் 'மாமனிதன், இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் வெளிவரலாம். தெலுங்கில் 'சைரா நரசிம்ம ரெட்டி' படம் வெளிவரும்.
தமிழ் சினிமாவில் தன் யதார்த்தமான நடிப்பால் தனக்கென தனி இடத்தை இந்த 2018ம் ஆண்டில் விஜய் சேதுபதி உருவாக்கிவிட்டார். அதற்கு '96' படத்தின் வெற்றி மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இனி வரும் காலங்களிலும் விஜய் சேதுபதியிடமிருந்து வித்தியாசமான படங்களையே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.