ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ஒருவர் ஜெகன். சினிமாவில் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தவர், முதன் முறையாக அவர் ஹீரோவாக நடிக்கும் படம் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. இதில் ஜெகன் ஜோடியாக மனிஷாஜித் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் பாகனேரி, பனங்காட்டுபாக்கம் பகுதிகளில் நடந்து வருகிறது. "வாடி வாடி என் வலையபட்டி மேளமே..." என்ற குத்துப் பாடலுக்கு ஜெகன் மனிஷா ஜித்துடன் ஆட்டம் போட்டார். இதில் விவேக், டிசோசா, பிறைசூடன், சாம்ஸ், அஷ்மிதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படத்திற்கான கதை, திரைக்கதை வசனத்தை காரைக்குடி நாராயணன் எழுதியிருக்கிறார். முருகலிங்கம் இயக்குகிறார். கவின் சிவா இசை அமைக்கிறார். சிவா ஒளிப்பதிவு செய்கிறார். காணாமல் போன ஒரு மாட்டை தேடி கண்டுபிடித்து கொடுக்கும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் கதை.