Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதி வாங்கிக் கொடுத்த படவாய்ப்பு

18 டிச, 2018 - 15:12 IST
எழுத்தின் அளவு:
Vijay-sethupathis-Mamanithan-update

விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை' படத்திற்கு பிறகு உதயநிதியை வைத்து கண்ணே கலைமானே என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் சீனுராமசாமி. அந்தப்படம் முடிவடைந்த நிலையில் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது.

இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் 4வது முறையாக இணைந்துள்ளார் சீனு ராமசாமி. 'மாமனிதன்' என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரை பக்கத்திலுள்ள ஆண்டிப்பட்டியில் துவங்கியது. கிராமத்துப் பின்னணியில் கதை நிகழும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார்.

'ஜோக்கர்' குரு சோமசுந்தரமும், நடிகை காயத்ரியும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார். விஜய்சேதுபதி ஹிந்து மதத்தை சேர்ந்தவராக நடிக்க, குரு சோமசுந்தரம் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக நடிக்கிறாராம். இஸ்லாமிய இளைஞராக நடிக்கும் குரு சோமசுந்தரத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையிலான எமோஷனல் டிராமா தான் மாமனிதன் படத்தின் கதையாம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தில் குருசோமசுந்தரம் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனாலும் 'மாமனிதன்' படம்தான் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம்.

இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் ஆண்டிப்பட்டியிலும், அதனை தொடர்ந்து கேரளா, காசி, ராமேஸ்வரத்திலும் நடக்க இருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in