ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சங்கத்தின் பொதுச் செயலராகவும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கும் விஷாலுக்கு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. 'அவரை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு, அந்தப் பொறுப்பில் புதியவர் ஒருவரை நியமிக்க வேண்டும்' என, சங்கத்தில் இருக்கும் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
'மூத்த தயாரிப்பாளர்களுக்கான பென்ஷன் தொகையை முழுமையாக கொடுக்காதது, செயற்குழு ஒப்புதல் இல்லாமல் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைத்தது, திரையரங்குகளில் உள்ள நவீன தொழில் நுட்பங்களில் படத்தை திரையிட்டு வந்த க்யூப், யு.எப்.ஓ., நிறுவனங்களை நீக்குவது, திரைப்படங்களை திரையிட அதிகப் பணம் செலவிட வேண்டியிருப்பது' என, திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது, சங்க உறுப்பினர்கள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர்.
இதே போன்ற பல குற்றச்சாட்டுக்களைக் கூறி, நடிகர் உதயா மற்றும் ஆர்.கே. சுரேஷ் ஆகியோர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் விஷாலை, தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, அப்பொறுப்பில் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என, தயாரிப்பாலர் சிவா உள்ளிட்ட பலரும் போர்க்கொடு துவங்கி உள்ளனர். இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில், நடிகர் விஷாலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.