மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பில் உள்ள படமாக விஸ்வாசம் இருக்கிறது. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பார்வை வெளிவந்த போது அது பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால், மோஷன் போஸ்டர் வந்த போது அஜித் ரசிகர்கள் அதைக் கொண்டாடினார்கள்.
ஒரு மோஷன் போஸ்டரையே யு டியூப் சாதனைப் பட்டியலில் முதல் முறையாக சேர்த்துவிட்டார்கள். அந்த மோஷன் போஸ்டர் இதுவரை 96 லட்சம் பார்வைகளையும், 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
அடுத்து வெளியான முதல் சிங்கிளான அடிச்சி தூக்கு பாடல், 1 கோடி பார்வைகளைத் தொட உள்ளது. இரண்டாவது சிங்கிளான வேட்டிக்கட்டு பாடல் 40 லட்சம் பார்வைகளைத் தொட உள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
விஸ்வாசம் டீசரை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.