கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதையடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் பிங்க் ரீமேக்கில் நடிக்கிறார் அஜீத். எச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் வேடத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பிலேயே அஜீத் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் மூன்று முக்கிய பெண் கேரக்டர்கள் உள்ளன. அதில் நஸ்ரியா ஒரு வேடத்தில் நடிப்பதாக கூறுகிறார்கள். இந்நிலையில், தற்போது ஹலோ தெலுங்கு படத்தில் அறிமுகமான டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இன்னொரு பெண் கேரக்டரில் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதோடு, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.