சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்துள்ள படம் கனா. நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 21-ந்தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பஞ்ச் டயலாக்குகள் பேசுவது டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இதுவரை கனா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு மெக்கானிக்காக நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அருண்ராஜா காமராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.