ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்தவர் கமலா காமேஷ், அவரது மகள்மான் உமா ரியாஸ். தற்போது படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது கணவர் ரியாஸ்கான் பல வருடங்களாக சினிமாவில் வில்லன் மற்றும் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நட்சத்திர தம்பதிகளின் மூத்த மகன் ஷாரிக் ஹசன்.
இவர் ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் படத்தில் பள்ளி மாணவனாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். விஜய் டி.வியின் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டார். தற்போது உக்ரம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
அட்டு படத்தை இயக்கிய ரத்தின் லிங்கா இயக்குகிறார். இது சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் திரில்லர் படமாக தயாராக இருக்கிறது. கதாநாயகியாக 'மிஸ் குளோபல்' பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார். கார் சேஸிங்கை மையமாகக் கொண்ட கதை. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், நெடுஞ்சாலைகளில் படமாக்கப்படுகின்றன. இதற்காக ஷாரிக் ரேஸ் காட்டு ஓட்டும் பயிற்சி எடுத்து வருகிறார்.