பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து |
தெலுங்கில் மஹதீரா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த ராஜமவுலி, அடுத்து நான் ஈ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நானி, சமந்தா, கன்னட நடிகர் சுதீப், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தாவை ஹீரோ நானியும், வில்லன் சுதீப்பும் காதலிக்கின்றனர். சமந்தாவோ நானியை காதலிக்கிறார். இதை தாங்க முடியாத சுதீப், நானியை கொலை செய்கிறார். நானியோ ஈ வடிவில் வந்த வில்லன்களை பலிவாங்குகிறார். இப்படியொரு கதையை வித்தியாசமாகவும், கிராபிக்ஸ் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார் ராஜமவுலி. இப்படம் இம்மாதம் 30ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில் படத்தில் கிராபிக்ஸ் உள்ளிட்ட சில பணிகள் நிறைவடையாததால், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது. அடுத்த மாதம் ஜூன் 8ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.




