ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பரீத், சிங், சாய்பல்லவி நடிப்பில் தயாராகிவரும் படம் என்.ஜி.கே. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். கடந்த தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தோடு துவங்கப்பட்ட படம் இது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியவில்லை.
செல்வராகவனிடம் சரியான திட்டமிடல் இல்லாததினால் நீண்ட தாமதம் ஏற்பட்டுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்.ஜி.கே படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜனவரி முதல் மாதத்துக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, என்.ஜி.கே படத்தை ஏப்ரலில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே படத்தை தாமதப்படுத்தியதால் செல்வராகவன் மீது அதிருப்தியில் இருந்தார் சூர்யா. எனவே மறுபடியும் படத்தை தாமதப்படுத்தாமல் விரைவில் படத்தை முடித்துக்கொடுக்கும்படி செல்வராகவனை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.