விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஆன்லைன் ஷாப்பிங் செயலியான அமேசான் வாயிலாக, விலை உயர்ந்த, ஹெட்போன் வாங்கிய நடிகை சோனாக்ஷிக்கு, துருப்பிடித்த கம்பிகள் அனுப்பப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஹெட்போனுக்கு பதில் துருப்பிடித்த கம்பிகள்
பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருஹன் சின்ஹாவின் மகள், நடிகை சோனாக்ஷி, 31. ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ரஜினியுடன், லிங்கா படத்தில் நடித்திருந்தார்.
அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் செயலியில், 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஹெட்போன் ஒன்றை, சோனாக்ஷி, சமீபத்தில் முன்பதிவு செய்தார். சமீபத்தில், அதற்கான, பார்சல் அவரது வீட்டில், டெலிவரி செய்யப்பட்டது. பெட்டியை ஆவலுடன் திறந்து பார்த்தவருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அதன் உள்ளே, ஹெட்போனுக்கு பதிலாக, துருப்பிடித்த இருப்பு கம்பிகள் இருந்தன. இதைப் பார்த்த சோனாக் ஷி அதிர்ச்சி அடைந்தார்.
மன்னிப்பு
இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் தகவல் பகிர்ந்தார். இதற்கு உடனடியாக, அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, சரியான பொருள் விரைவில் ஒப்படைக்கப்படும் என, அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகர் நகுல், தனது மனைவிக்கு விலையுர்ந்த பரிசு ஒன்றை, ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு மிகவும் விலை குறைந்த மொபைல் அனுப்பி வைத்திருந்தனர்.