ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், இயக்குநர் மகேந்திரன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக வர உள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா, ஞாயிறு அன்று நடந்தது. பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ரஜினிக்கு நாளை(டிச.,12) பிறந்தநாள். இதையொட்டி, ரசிர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக பேட்ட படத்தின் டீசரை காலை 11 மணிக்கு வெளியிடுகின்றனர்.
பேட்ட படத்தின் இசை வெளியீட்டின் போதே, பிறந்தநாளில் யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம், நான் ஊரில் இருக்க மாட்டேன், தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் என கூறிவிட்டார். இதனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக டீசரை வெளியிடுகின்றனர்.