ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் நடிக்க வந்த புதிதில் மந்தைவெளியில் உள்ள நார்டன் சாலையில் குடியிருந்தார். அதன் பிறகு கொட்டிவாக்கம் வால்மீகி நகருக்கு குடிபெயர்ந்தார். அவருடைய வீட்டைத்தேடி ரசிகர்கள் தினமும் வருவதால் அஜித்துக்கு ஏகப்பட்ட அசௌகர்யம். எனவே அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்கிறார்.
சென்னையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். ஐந்து கிரவுண்டு பரப்பளவில் அரண்மனையைப்போல் உருவாகிவரும் இந்த வீட்டில், டிஜிட்டல் தியேட்டர், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என சகல வசதிகளும் அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
டப்பிங்குக்காக சினிமா ஸ்டுடியோ, டப்பிங் தியேட்டர்களுக்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் தொல்லை அதிகரித்துவிட்டதால் இனிமேல் தான் நடிக்கும் படங்களின் டப்பிங்கை தன்னுடைய வீட்டில் அமைய உள்ள டப்பிங் தியேட்டரிலேயே முடித்துவிடுவாராம்.
தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், இதைத் தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் பாலிவுட் படத்தின் ரீமேக் இது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.