ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூப்பர் ஸ்டார் ரஜினி, த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக் நடித்துள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் நடக்கிறது.
இதில் ரஜினி, விஜய்சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். அனிருத்தின் இசை நிகழ்ச்சியும், நடிகர், நடிகைள் கலந்து கொள்ளும் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை முன்னணி சேனல் மாலை 6.30 மணி முதல் விழா முடியும் வரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த விழாவில் ரஜினி பேசப்போகும் விஷயம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.