Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, முருகதாஸ் படம் இன்னும் முடிவாகவில்லை?

06 டிச, 2018 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Rajini---AR-Murugadoss-film-not-confirmed

'சர்கார்' படத்திற்குப் பிறகு ஏஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அதோடு படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என தகவல் வெளியானது. ஆனால், இதுவரை தன் இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற தகவலை முருகதாஸே வெளியிட்டுள்ளார்.

'பேட்ட' படத்தில் நடித்த பின் ரஜினிகாந்த் புதிய படம் எதிலும் நடிக்க இன்னும் சம்மதிக்கவில்லை என்றே தெரிகிறது. அடுத்த வருடம் மே மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கவும் வாய்ப்புள்ளது.

கடந்தாண்டு, தன் பிறந்தநாளின் போது அரசியலில் இறங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தன் அரசியல் நுழைவைப் பற்றி அன்றைய தினம் ரஜினிகாந்த் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதன்பிறகே ரஜினி, அடுத்து புதிய படத்தில் நடிப்பாரா இல்லையா என்பது தெரிய வரும். அரசியலில் இறங்கினால், பார்லிமென்ட் தேர்தலில் பிரச்சாரம் செய்யவும், போட்டியிடவும் சூழல் உருவாகலாம். எனவே, அதற்குப் பிறகு அவர் நடிக்க சம்மதிம் சொல்லலாம். எப்படியோ, ரஜினியின் அடுத்த மூவ் என்ன என்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட கங்கை அமரன்அனிருத்தை கலாய்த்து மீம்ஸ் போட்ட ... விதையாய் இருந்தவரை இழந்து விட்டோம் : விஷால் விதையாய் இருந்தவரை இழந்து விட்டோம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07 டிச, 2018 - 11:17 Report Abuse
Mirthika Sathiamoorthi ரஜினி இவளவு நஷ்டம் படத்துக்கு படம் கொடுத்ததும் அந்தஆலவாச்சு இன்னும் படம் தயாரிக்க காத்துட்டு இருக்கறதுதான் கொடுமை..2.௦ 500 கோடி..அதுவும் ரஜினி உடம்புக்கு முடியல வேணும்ன்னு சொன்னாலும் இல்ல நீங்கதான் நடிக்கணும்ன்னு சொல்லி....சரி தொலையிது சங்கர் படம்.... ஆனா பாருங்க பேட்ட குறைஞ்சு பட்சம் 75 கோடி இருக்கும் ..இதுல இனொரு வேடிக்கை, இந்த படத்தை விநியோக உரிமை இந்தியாமுழுவதும் வெளியிட தாணு 130 கோடிக்கு பேசிகிட்டு இருக்கார்ன்னு ஒரு தகவல்...இது பத்தாதுன்னு முருகதாஸ் காம்பினேஷன்..முருகு விஜய்க்கே 85 கோடி செலவு இழுத்து விட்ட மனுஷன்..தலைவர் படத்துக்கு மினிமம் 100 கோடி பிளான் பண்ணியிருப்பாரு..கோடிகணக்கா நஷ்டம் ஏற்படுத்துற ரஜினியவச்சு ஏன்தான் இந்த தயாரிப்பாளனுங்க கோடில செலவுசெய்ய அலையரங்களோ தெரியல..?ஒரு வேலை இந்தியாமுழுவதும் பிசினஸ் பண்ணமுடியும்ன்னு நம்புறாங்களோ.ஒரு எழவும் புரியல....இங்கு கருத்து சொன்ன திரு விஜய் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. சூப்பர்ஸ்டார் சாதனைகளை அவரால்தான் உடைக்க முடியும்.. .இன்னும் 2 வருஷத்திலே சட்டமன்ற தேர்தல்...அதுக்கப்புறம் தலைவர் திரைத்துறையிலிருந்து கமல் மாதிரி விலகிடுவார் ..அதுக்குள்ளே என்ன அவசரம் இந்த தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்ன்னு தெரிஞ்சும் காசைகொட்டறது?
Rate this:
Vittal Anand - Chennai,இந்தியா
07 டிச, 2018 - 07:45 Report Abuse
Vittal Anand தலைப்பை மாத்திரம் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். மற்றபடி பழைய ரஜினி படங்களின் பிட்டுக்களை எடுத்து எடிட் செய்து படமாக்குங்கள். அரைத்த மாவையே அரையுங்கள் .சின்ன பெண்களாக ஜோடி செய்யுங்கள்.ரஜினியோடு டான்ஸாட வையுங்கள் . தூத்துக்குடி இளைஞர்களை ரௌடிகளை போல காண்பியுங்கள். அவர்களை ரஜினி பந்தாடுவதை போல காண்பியுங்கள். ஏதேனும் ஒரு அரசியல் பன்ச் டைலாக் சேருங்கள். ரஜினி படம் ரெடி
Rate this:
rishi - varanasi,இந்தியா
07 டிச, 2018 - 03:33 Report Abuse
rishi என்ன ரஜினி சார் திடீருனு வந்து படம் எடுன்னு சொல்லுறீங்க திருடின கதைல ஒன்னு சொல்லுறேன் கேளுங்க .
Rate this:
சத்தி வேல், நோர்வே. கதை இன்னும் ஒரு வரும் வந்து சொல்லவில்லை, யாராவது வந்து சொன்னபின், சில மாற்றங்கள் செய்து தனது கதை என்று ரஜினி ஐயாவை அணுகுவார். அதுவரை பொறுத்திருங்கள்.
Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
06 டிச, 2018 - 20:00 Report Abuse
Raghuraman Narayanan அது சரி. இந்த கதை அவரது கதைதானே என ரஜினி திருப்தி அடைய வேண்டாமா? அனாவசியமாக பிறகு ஏதாவது பிரச்சினை வந்து விட்டால்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in