ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ்த் திரையுலகத்தில் மறக்க முடியாத ஒரு கூட்டணியாக செல்வராகவன், தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இருந்தது. செல்வராகவன், தனுஷ் ஆகியோரது ஆரம்ப காலப் படங்களான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்களின் பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்தக் கூட்டணி கடந்த பத்து வருடங்களாக பிரிந்து போனது.
மீண்டும் யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி 'மாரி 2' படத்தின் மூலம் இணைந்தது ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பைப் பெற்றது. கடந்த வாரம் வெளியான 'மாரி 2' படத்தின் சிங்கிள் டிராக்கான ரௌடி பேபி பாடல் யுவன், தனுஷ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. யு டியூபில் அந்தப் பாடல் தற்போது ஒரு கோடி பார்வையைக் கடந்திருக்கிறது. இருவரது கூட்டணியின் முதல் ஒரு கோடி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'மாரி 2' படத்தின் ஒரு பாடல் வரவேற்பிற்காக தனுஷும், யுவனும் அதற்காக மாறி மாறி நன்றி தெரிவித்தும், பாராட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். ரௌடி பேபி பாடல் ஒரு கோடி பார்வையைக் கடந்த நிலையில் நேற்று வெளியான 'மாரி 2' டிரைலரும் 84 லட்சம் பார்வைகளைக் கடந்து ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.