அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனான ரமேஷ், ஜித்தன் உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து அவரால் ஹீரோவாக தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே தன்னுடைய அப்பாவின் வழியில் தயாரிப்பாளராகிவிட்டார்.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் விமல், அஞ்சலி நடித்த 'மாப்ள சிங்கம்' என்ற படத்தை இயக்கியவர் ராஜசேகர். இவருடைய இயக்கத்தில்தான் 'ஜித்தன்' ரமேஷ் படம் தயாரிக்கிறார். நட்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் ஜீவாவும், அருள்நிதியும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார்.
ஜீவா இப்போது 'ஜிப்சி', 'கீ', 'கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அருள்நிதி, ' புகழேந்தி என்னும் நான்' படத்தில் நடித்து வருகிரார். மஞ்சிமா மோகன் 'தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் மூவரும் இணைந்து நடிக்க, உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 13-ஆம் தேதி துவங்க இருக்கிறது.