பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். அதையடுத்து பல படங்களில் நடித்து விட்டார். அதில் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஐ, 2.ஓ மெகா படங்கள்.
இதில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் அவர் நடித்துள்ள 2.ஓ படத்தில் நிலா என்ற ரோபோவாக நடித்துள்ளார். அதோடு சிட்டி ரோபோவின் காதலியாகவும் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்திற்காக ஒரு காட்சியில் ரோப்பில் உயரே பறந்தபடி டைவடிக்கும் காட்சியில் டூப் பயன்படுத்தாமல் தானே நடித்திருந்தார் எமி. இந்த படத்தில் தனது நடிப்புக்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்நிலையில், 2019ம் ஆண்டை தான் வரவேற்பதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ள எமிஜாக்சன், தனது பழைய போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.