ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர், இயக்குனர் ரமேஷ் கண்ணா, இவரது மகன் ஜஸ்வந்த். ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஸ்பைடர் மற்றும், சர்கார் படத்தின் துணை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவருக்கும் பிரியங்காவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
இந்த வரவேற்பில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குனர்கள். ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, சேரன், எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன். ஆர்.கே.செல்மணி, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.பி.ஜனநாதன், அட்லி, மோகன்ராஜா, நடிகர்கள் சிவகுமார்,ராஜ்கிரண், நிழல்கள்ரவி, மனோபாலா, நடிகைகள் கே.ஆர்.விஜயா, சச்சு, ஊர்வசி சாரதா, மீனா, தேவயானி, ஜெயசித்ரா. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜி.கே.ரெட்டி, எடிட்டர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.